கோவையில் 40 வயது மனித மிருகம் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது! பின்னணி என்ன?!  - Seithipunal
Seithipunal


கோவை அருகே 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், 40 வயது உடைய நபரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை மாவட்டம், சூலூர் பகுதியில் சேர்ந்த 11 வயது பள்ளி மாணவி ஒருவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது, இதனை அடுத்து அவரை மருத்துவமனையில் அவரின் தந்தை அனுமதித்த நிலையில், அவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டுள்ளார் என்பது தெரிய வந்தது. 

இதனை அடுத்து சிறுமியின் தந்தை கருமத்தம்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டதில், சூலூர் பகுதியில் சேர்ந்த 40 வயது சிவக்குமார் என்பவர்தான் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.

இதனை அடுத்து அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் பரிந்துரை செய்தார். 

அதன் அடிப்படையில் நின்ற சிவக்குமாரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kovai Sulur Child Abuse Culprit aerated in Gundas


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->