கோயம்பேடு, தாம்பரத்தில் பேருந்து முன்பதிவு செய்தவர்கள் கவனத்திற்கு.!!
Koyambedu Tambaram passengers advised travel from Kilamakkam Bus Stand
செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில் சுமார் 88 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.393.74 கோடி மதிப்பேட்டில் அதிநவீன வசதி கொண்ட பேருந்து நிலையம் கட்டப்பட்ட நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். இந்த பேருந்து நிலையத்திலிருந்து அரசு விரைவு போக்குவரத்து கழகம் மற்றும் மாநகர விரைவு போக்குவரத்து கழக பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
தென் மாவட்டங்கள் உட்பட தமிழக முழுவதும் பல்வேறு மாவட்டங்களுக்கு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று முதல் வரும் ஜனவரி 30ம் தேதி வரை கோயம்பேடு மற்றும் தாம்பரம் பேருந்து நிலையத்திலிருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து தங்கள் பயணத்தை தொடரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கம் வரைலான கட்டணம் அவரவர் வங்கி கணக்கில் திருப்பி செலுத்தப்படும் எனவும், சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு பதில் கேளம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து செல்லும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது
English Summary
Koyambedu Tambaram passengers advised travel from Kilamakkam Bus Stand