#சென்னை || டாஸ்மாக் மது போதை., தர்மஅடி., கண்ணாடி உடைப்பு., கைதான வாலிபர்.! - Seithipunal
Seithipunal


சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து கள்ளக்குறிச்சிக்கு செல்லும் அரசு பேருந்து, காசி திரையரங்கம் அருகே சென்றுக்கொண்டிருந்த போது மது போதையில் இருந்த வாலிபர் ஒருவர் அருகிலிருந்த இரும்பு பலகையை எடுத்து தாக்கி பேருந்தின் பின்பக்க கண்ணாடியை உடைத்துள்ளார்.

இந்த தாக்குதலில் பேருந்தின் உள்ளே அமர்ந்திருந்த இருவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. உடனடியாக பேருந்தில் இருந்தவர்கள் கீழே இறங்கினார்கள். மேலும் அருகிருந்த பொதுமக்களும் பேருந்தில் இருந்தவர்களும் போதையில் இருந்த வாலிபரை கடுமையாக தாக்கி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்த குமரன் நகர் காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, அந்த  வாலிபரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையின் போது சாலையில் சென்ற வாகனத்தை வேண்டுமென்றே உடைத்தாக ஒப்புக்கொண்டதால், பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் அளித்த புகாரின் பேரில் அந்த வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

koyampedu bus front glass broke police arrest


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->