'ஏழையின் சிரிப்பில் இறைவன்' KPY பாலாவின் அடுத்த டார்கெட்!
KPY Bala next move
மெலிந்த தேகம் கருத்த நிறம் சாமானிய தேகம் இப்படி நாம் அன்றாடம் பார்க்கும் நம் பக்கத்துக்கு விட்டு பயன் போல் தோன்றுபவர் தான் விஜய் டிவி பாலா. இவருக்கு வெட்டுக்கிளி பாலா என்ற செல்ல பெயரும் உண்டு. வெறும் 130 ரூபாயுடன் கரைக்காலில் இருந்து சென்னைக்கு வந்த பாலா, தற்போது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விஜய் டிவி நிகழ்ச்சிகளில் தனது கவுண்டரால் குலுங்கி குலுங்கி சிரிக்கவைத்து வருகிறார்.
2017 ஆம் ஆண்டு கலக்கப்போவது யாரு சீசன் 6 இல் ஸ்டாண்டப் காமெடியனாக தனது பயணத்தை தொடங்கிய பாலா, அந்த சீசனில் டைட்டில் வின்னராகி ரசிகர்களின் மனதை கவர்ந்து விட்டார். கோபிநாத் , மகாபா, பிரியங்கா வரிசையில் பாலாவும் விஜய் டிவி குடும்பத்தில் நிரந்தர உறுப்பினராக இணைந்து விட்டார்.
இதுவரை தான் சம்பாதித்த பணத்தில் 4 இலவச ஆம்புலன்ஸை வாங்கி கொடுத்து இருக்கிறார் பாலா. அதே போல சமீபத்தில் மிஃஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்து இருந்தார். பல்லாவரம், அனகாபுத்தூர், பம்பல் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடும்பத்திற்கு தலா 1000 ரூபாய் வீதம் 200 குடும்பங்களுக்கு ரூபாய் 2 லட்சம் ரூபாய் உதவித்தொகை வழங்கி இருந்தார்.
இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் அமைந்திருக்கிறது நெக்னா மலைக்கிராம மக்களுக்கு
ஆம்புலன்ஸ் வழங்கி உதவிக்கரம் நீட்டி இருக்கிறார்.
இவரின் செய்து வரும் நற்செயலை சமீபத்தில் பாமக தலைவர் அனபமணி ராமதாஸ் பாராட்டியது குறிப்பிடத்தக்கது. இப்படி இவரின் செயல்பாடுகளை ஒரு சாரார் பாராட்டினாலும், ஒரு சிலர் எத்தனையோ நடிகர்கள் மார்க்கெட்டின் உச்சத்தில் இருக்கும் போது சம்பாதித்த பணத்தை சேமித்து வைக்காமல் வாழ்வின் இறுதி காலங்களில் பெருந்துயரத்தை அனுபவிக்கின்றனர். அதனால் பாலா தனக்கென்று பணத்தை சேமித்து வைக்க வேண்டும் என்றும் அறிவுரை கூறுகின்றனர்.
மேலும் சிலரோ, இவருக்கு ஒருவகையான உளவியல் பிரச்சனை இருப்பதாகவும், தன்னை பலர் பாராட்டுவதை ரகசியமாக ரசிப்பதாகவும் விமர்சிக்கின்றனர். அதோடு, தம்பி நாளைக்கு உனக்கு ஒரு பிரச்னைன்னா யாரும் வரமாட்டார்கள் என்று செல்லமாகவும் கண்டிக்கிறார்கள். என்னப்பா! அரசியலுக்கு வர ஐடியா இருக்கா என்றும் எக்ஸ் தளத்தில் இவரை கலாய்ப்பவர்களும் உண்டு.
கோடிகளில் புரளும் நடிகர்களே சில ஆயிரங்களை செலவு செய்யத் தயங்கும் நிலையில், தனது வருமானத்தின் பெரும் பகுதியை மக்களுக்காக செலவிட்டு வரும் பாலாவை மனதார பாராட்டத்தான் வேண்டும்.