கிருஷ்ணகிரி சம்பவம் : தலைமறைவாக இருந்த 2 பேர் இரவோடு இரவாக கைது! - Seithipunal
Seithipunal


கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே, தனியார் பள்ளியில் போலி NCC முகாம் நடத்தி, பள்ளி மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டார். இது தொடர்பாக போலீசார் 11 பேரை கைது செய்தனர்.

தொடர்ந்து  சிவராமன், காவல் துறை சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணைக்கு முன்பாகவே எலி மருந்து சாப்பிட்டு, காவல் துறையால் சேலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலன் அளிக்காமல் சமீபத்தில்  உயிரிழந்தார்.

மேலும், அவரது தந்தை அசோக்குமார் என்பவரும்  இரவு மதுபோதையில் இருந்தபோது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்துவிட்டார். இந்நிலையில் நேற்று சிறப்பு புலனாய்வு குழுவினர் 5-வது நாளாக விசாரணை நடத்தினர். இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை சோ்ந்த சுதாகர் என்பவர் நேற்று கைது செய்யப்பட்டார்.

அதே போல கடந்த ஜனவரி மாதம் மற்றொரு பள்ளியில் போலியாக என்.சி.சி. முகாம் நடத்தி, 9-ம் வகுப்பு படிக்க கூடிய 14 வயது மாணவி சிவராமனால் பலாத்காரம் செய்யப்பட்டார். அது தொடர்பாக கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் அந்த வழக்கிலும் கிருஷ்ணகிரியை சேர்ந்த கமல் என்பவர் நேற்று இரவு கைது செய்யப்பட்டார். இதன் மூலம் இந்த வழக்கில் இதுவரை கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 13ஆக உயர்ந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Krishnagiri incident 2 absconding persons arrested overnight


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->