கிருஷ்ணகிரி விவரம்: கொடூரன் சிவராமன் மீது மேலும் ஒரு பள்ளி மாணவி புகார்! அதிரவைக்கும் அதிர்ச்சி பின்னணி!
Krishnagiri one more School Girl Abused case
கிருஷ்ணகிரி மாவட்டம், கந்திகுப்பம் கிராமத்தில் செயல்பட்டு வந்த தனியார் பள்ளியில், போலியாக என்சிசி முகாம் நடத்தப்பட்டு, 13 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இதில் பதிமூன்று வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், காவேரிப்பட்டணம் காந்திநகர் காலனியை சேர்ந்த நாம் தமிழர் கட்சி முன்னாள் நிர்வாகி சிவராமன் (35 வயது) என்பவரை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர்.
மேலும் மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் பள்ளியின் முதல்வர், தாளாளர், ஆசிரியர்கள், பயிற்சியாளர்கள் உள்ளிட்ட 10 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கு இடையே சிவராமன் குறித்து பல்வேறு புகார்கள் அடுத்தடுத்து வந்து கொண்டிருக்கின்றன. சிவராமனால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து அவர் மீது புகார் கொடுக்கத் தொடங்கியுள்ளனர்.
குறிப்பாக நிலம் தொடர்பான பிரச்சனையில் கட்டப்பஞ்சாயத்து செய்து, ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு தரப்பினடமிருந்து சுமார் 7 லட்சம் ரூபாய் பணத்தை பெற்று ஏமாற்றியதாக ஒரு புகார் எழுந்துள்ளது.
இந்த நிலையில், சிவராமன் மீது பள்ளி மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை புகார் தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த ஒரு மேலும் ஒரு தனியார் பள்ளியில் என்சிசி போலியான என்சிசி முகாம் நடத்தப்பட்டதாகவும், அப்போது அந்த மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும், சிவராமனால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கலாம் என்று சமூகநலத்துறை செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன் அறிவிப்பு வெளியுட்டுள்ளார்.
English Summary
Krishnagiri one more School Girl Abused case