கிருஷ்ணகிரி: பள்ளி மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் மேலும் ஒருவர் கைது! - Seithipunal
Seithipunal


கிருஷ்ணகிரி அருகே தனியார் பள்ளியில் போலியாக என்சிசி முகாம் நடத்தி பள்ளி மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

எட்டாம் வகுப்பு பள்ளி மாணவி ஒருவர் அளித்த புகாரின் பேரில் இந்த சம்பவம்  வெளி உலகத்திற்கு தெரிய வந்தது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்ட நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகி சிவராமன் தற்கொலை செய்து கொண்டார்.

மேலும் இந்த வழக்கில் பள்ளி முதல்வர், தாளாளர், ஆசிரியர் உள்ளிட்ட 19 க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கை தாமாக முன்வந்து சென்னை உயர்நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்து உள்ளது.

இந்நிலையில், பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார். 

இந்த வழக்கில் தற்கொலை செய்துகொண்ட முக்கிய குற்றவாளியான நாதக நிர்வாகி சிவராமனின் கூட்டாளியான காவேரிப்பட்டினத்தை சேர்ந்த ரவி (வயது 30) என்பவர் தற்போது போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளார். 

ஏற்கனவே இந்த வழக்கில் 19 பேர் கைது செய்யப்பட்டு உள்ள நிலையில், தற்போது அது 20 ஆக உயர்ந்துள்ளது. இந்த 20 பெரும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர் எனபது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Krishnagiri School Girl Abuse case one more arrest


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->