சிவராமன் ரத்த பரிசோதனை ரிப்போர்ட்! அதிர்ச்சியில் உறைந்த போலீசார்! தீவிர சிகிச்சை!
Krishnagiri School Girls abused case sivaraman attempt suicide
கிருஷ்ணகிரி, கந்திகுப்பம் தனியார் பள்ளியில், போலியாக என்சிசி முகாம் நடத்தப்பட்டு, 13 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவத்தின் முக்கிய குற்றவாளி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பதிமூன்று வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், காவேரிப்பட்டணம் காந்திநகர் காலனியை சேர்ந்தசிவராமன் (35 வயது - நாம் தமிழர் கட்சி முன்னாள் நிர்வாகி) என்பவரை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த 18ஆம் தேதி போலீசார் கைது செய்யும்போது, எலிகளுக்கு கொடுக்கப்படக்கூடிய விஷ மாத்திரையை சிவராமன் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து அவருக்கு ரத்தப் பரிசோதனை ரத்த பரிசோதனை செய்யப்பட்டது. இதில், அவர் விஷ மாத்திரை உண்டதும், அந்த விஷம் ரத்தத்தில் கலந்து இருப்பதையும் மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர். இதனை அடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.
இதற்கிடையே, சிவராமன் மீது பள்ளி மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை புகார் தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த ஒரு மேலும் ஒரு தனியார் பள்ளியில் என்சிசி போலியான என்சிசி முகாம் நடத்தப்பட்டதாகவும், அப்போது அந்த மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
English Summary
Krishnagiri School Girls abused case sivaraman attempt suicide