தமிழகத்தில் குறவன் குறத்தி ஆட்டத்திற்கு தடை.. அரசாணை வெளியீடு.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கோயில் திருவிழாக்களில் நடத்தப்படும் குறவன் குறத்தி ஆட்டத்திற்கு தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் பொதுவாக கோவில் திருவிழாக்களில் குறவன் குறத்தி ஆட்டம் நடைபெறுவது வழக்கம். அதில் குறவன் குறத்தி ஆட்டம் நாளடைவில் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் போல ஆபாசமாக ஆடப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டது. மேலும், அதில் குறிப்பிட்ட சமூகத்தினர் அவமதிக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி தமிழ்நாடு சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை சார்பில் கடந்த மார்ச் 10 ஆம் தேதி தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

சமூகத்தினர்களை முன்னிலைப்படுத்தும் வகையில் தான் நமது பாரம்பரிய கலைகளை கண்டு வந்திருக்கிறோம். ஆனால் இன்றைய நாகரீகத்தில் ஒரு சமூகத்தினரை மட்டும் இழிவுபடுத்தும் வகையில் ஆடப்படும் இந்த நிகழ்ச்சிகள் நிறுத்தப்பட்டது நல்லது என பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kuravan kurathi dance banned in tamilnadu


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->