தமிழக பெண்களுக்கு எதிரான பிரச்சினைகளில் அதிகம் கவனம் செலுத்துவேன் - குஷ்பு.! - Seithipunal
Seithipunal


பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு, தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக நேற்று நியமனம் செய்யப்பட்டார். இதனையடுத்து அவருக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இந்த நிலையில் இன்று டெல்லியில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக நடிகை குஷ்பு பதவியேற்றுக் கொண்டார். அதன்படி, தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக 3 ஆண்டுகள் வரை குஷ்பு பதவியில் நீடிப்பார் என கூறப்படுகிறது.

தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக பொறுப்பேற்ற பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய குஷ்பு, நான் ஏற்கனவே பெண்களுக்கு ஆதரவாக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறேன். பெண்களின் உரிமைகளுக்காகவும் நலனுக்காகவும் எந்த அளவுக்கு பேச வேண்டுமோ அந்த அளவுக்கு பேசி வருகிறேன்.

தற்போது பெண்களுக்கு மேலும் உதவி செய்ய நல்வாய்ப்பாக இந்த பொறுப்பு எனக்கு கிடைத்துள்ளது. இதற்கு வரும் எதிர்ப்புகளையும், விமர்சனங்களையும் கண்டு நான் ஒருபோதும் அஞ்சியதில்லை. மேலும், தேசிய மகளிர் ஆணையம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கைகளை எடுப்பேன்.

 பெண்களுக்கு ஏற்படும் கொடுமைகளை யாரிடம் சொல்வது என்று தெரியாமல் காவல் நிலையத்திற்கு சென்றால் போதும் என்று நினைக்கிறார்கள் ஆனால் அரசு சார்பில் மகளிர் ஆணையம் ஒன்று இருப்பது பலருக்கும் தெரிவதில்லை. பெண்கள் எளிதாக ஆணையத்தை தொடர்பு கொள்ளலாம், கடிதம் எழுதலாம், உறுப்பினர்களை சந்தித்து பேசலாம் என அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kushbu press meet after national womens commission member


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->