கோயில் நிதியில் இருந்து ஊட்டியில் ரிசார்ட்! அரசாணை திரும்பப் பெற்ற தமிழக அரசு!
Kvai Masani Amman Chennai HC DMK Govt
கோவை பொள்ளாச்சி மாசாணியம்மன் கோயில் நிதியில் இருந்து ரூ.1.4 கோடி செலவில் ஊட்டியில் ரிசார்ட் கட்ட தமிழக அரசு வெளியிட்ட அரசாணை தற்போது திரும்பப் பெறப்பட்டுள்ளது. இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்துள்ளது.
100 கோடி ரூபாய் வங்கியில் வைப்பு
மாசாணியம்மன் கோயிலுக்கு பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய ரூ.100 கோடி, வங்கியில் வைப்புநிதியாக வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதிலிருந்து ஊட்டியில், சுப்ரமணிய சுவாமி கோயில் அருகே, ரிசார்ட் கட்ட அரசு திட்டமிட்டது. இதற்கு எதிராக செங்கல்பட்டையைச் சேர்ந்த பார்த்தசாரதி, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
நீதிமன்ற விசாரணை
தலைமை நீதிபதி கே.ஆர். ஶ்ரீராம் மற்றும் முகமது ஷபீக் அமர்வில், வழக்கறிஞர் பி. ஜெகன்நாத், "கோயில் நிதி, கோயில் நலத்திற்கே பயன்படுத்தப்பட வேண்டும்" என பல வழக்குகளில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை குறிப்பிட்டார்.
அரசு தரப்பு விளக்கம் அளிக்கையில், ரிசார்ட் என தவறாக குறிப்பிடப்பட்டதாகவும், இது பக்தர்களுக்கான தங்குமிடமாக மாற்றப்படும் என்பதால் அரசாணை திரும்பப் பெறப்படும் என தெரிவித்தது. இதனை நீதிமன்றம் பதிவு செய்து, வழக்கை முடித்து வைத்தது.
English Summary
Kvai Masani Amman Chennai HC DMK Govt