தேர்தல் ஆணையம் முழு கண்காணிப்பில் இருக்க வேண்டும் - எல்.முருகன் வேண்டுகோள்.! - Seithipunal
Seithipunal


மத்திய இணை மந்திரியும் நீலகிரி தொகுதி பா.ஜ.க வேட்பாளர் எல். முருகன் கோயம்புத்தூர் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், 

நேற்று நீலகிரி ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமராக்கள் 20 நிமிடம் செயல் இழந்ததாக தகவல் வெளியானது. தொழில்நுட்ப காவலாறு மற்றும் வெப்பம் அதிகமாக இருப்பதால் சிசிடிவி கேமராக்கள் செயல் இழந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஊட்டியிலும் வெயில் அதிகமாக தான் இருக்கிறது. எந்த ஒரு காரணமும் தெரிவிக்காமல் தேர்தல் ஆணையம் 24 மணி நேரமும் முழு கண்காணிப்பில் ஈடுபட வேண்டும். 

கேமரா செயலிழப்புக்கு பொருந்தாத காரணங்கள் சொல்வதை நிறுத்த வேண்டும். காங்கிரசும், இந்தியா கூட்டணியும் தோல்வி பயத்தால் மின்னணு வாக்கு பதிவு இயந்திரம் குறித்து ஏதாவது தெரிவித்து திசை திருப்பி வருகின்றனர். 

500 ஆண்டுகால மக்களின் போராட்டம், மக்களின் விருப்பத்தை நிறைவேற்ற அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. அங்கு செல்ல மாட்டேன் என தெரிவித்த ராகுல் காந்திக்கு கடவுள் மீது நம்பிக்கை இல்லை என்பதை காட்டுகிறது என தெரிவித்துள்ளார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

L Murugan says Election Commission under full surveillance 


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->