மதுபாட்டிலில் இறந்து கிடந்த ஓணான் - தொழிலாளிக்கு வாந்தி, மயக்கம்! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டத்தில் உள்ள திட்டக்குடி அருகே கீழ்ஆதனூர் கிராமத்தை சேர்ந்தவர் கொளஞ்சிநாதன். தொழிலாளியான இவர் நேற்று மதியம் திட்டக்குடி அடுத்த பெருமுளை கிராமத்தில் உள்ள அரசு மதுபானக் கடையில் மதுபாட்டில் வாங்கி மதுவை குடித்துள்ளார். 

அப்போது பாட்டிலில் ஓணான் ஒன்று செத்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அடுத்த சில நிமிடங்களில் கொளஞ்சிநாதனுக்கு வாந்தி-மயக்கம் உள்ளிட்ட உபாதைகள் ஏற்பட்டது. உடனே அங்கிருந்தவர்கள் கொளஞ்சிநாதனை மீட்டு சிகிச்சைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 

அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். 

இதற்கிடையே இந்த குறித்த புகாரின் பேரில் திட்டக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் மதுப்பிரியர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

laborer admitted hospital for drunk dead onan liquor in cuddalore


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->