திமுக எம்பி மீதான நில அபகரிப்பு வழக்கு ரத்து!
Land grab case against DMK MP cancelled
திமுக எம்பி ஜெகத்ரட்சகன் மீதான நில அபகரிப்பு வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது!
திமுகவின் மூத்த தலைவரும் அரக்கோணம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெகத்ரட்சகன் கடந்த 1995 ஆம் ஆண்டு குரோம்பேட்டையில் இருக்கக்கூடிய குரோம் தோல் தொழிற்சாலை வாங்கியது தொடர்பாக குவிந்தன் தாசன் என்பவர் புகார் அளித்திருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்கள். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார் ஜெகத்ரட்சகன். அந்த மனுவை விசாரித்து வந்த சென்னை உயர்நீதிமன்றம் வழக்கு தொடர்பான விசாரணை மேற்கொள்ள இடைக்கால தடை விதித்திருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கின் இறுதி தீர்ப்பை இன்று வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்து வந்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் தாக்கல் செய்த மனுக்களை ஏற்றுக் கொண்டு அவர் மீதான இரு வழக்குகளை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
English Summary
Land grab case against DMK MP cancelled