லியோ கொண்டாட்டம்! கிருஷ்ணகிரியில் ரசிகருக்கு நேர்ந்த சோகம்!
LEO Krishnagiri Vijay Fan Admit hospital
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய்-யின் லியோ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
கஞ்சா, புகையிலை, மது, வெட்டு, குத்து, ரத்தம் தெறிக்க தெறிக்க படம் எடுப்பதில் கில்லாடியாக வளம் வரும் லோகேஷ் கனகராஜ், தனது இந்த படத்திலும் அதற்க்கு பஞ்சமில்லாமல் பார்த்து பார்த்து செதுக்கி வைத்துள்ளார் என்பது ட்ரைலரே உணர்த்தியிருந்தது.
நடிகர் விஜயின் ரசிகர்கள் இந்த படத்தை மிகப்பெரிய வசூல் சாதனை படைக்க திட்டமிட்டு, படத்தின் வெளியிட்டுக்காக காத்திருந்தனர்.
மேலும், முதல் நாளே 170 கோடிக்கு மேல் வசூல் செய்து புதிய உச்சத்தை தொடவும், விஜய் ரசிகர்கள் திட்டமிட்டு செய்யப்பட்டு வந்தனர்.
ஆனால், அதிகாலை கட்சிகளுக்கு அனுமதி கிடைக்காத நிலையில், இன்று காலை 9 மணிக்கு தமிழகத்தில் வெளியானது.
ஆந்திராவின் திருப்பதி, சித்தூர், நகரி, புத்தூர் உள்ளிட்ட பகுதி திரையரங்குகளில் இன்று காலை 5 மணிக்கே லியோ திரையிடப்பட்டது.
இதற்காக தமிழகத்தைச் சேர்ந்த ரசிகர்கள் நேற்று இரவே தியேட்டர்களுக்கு வந்து விடிய விடிய காத்திருந்து காலை திரைப்படத்தை பார்த்து கொண்டாடினர்.
இந்நிலையில், கிருஷ்ணகிரியில் நடிகர் விஜய்யின் லியோ படத்திற்கு டிக்கெட் கிடைக்காததால், திரையரங்கின் பின்புற சுவற்றில் ஏறி குதித்த விஜய் ரசிகரின் கால் முறிந்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.
கால் முடிந்த விஜய் ரசிகர் அன்பரசனை மீட்ட காவல்துறையினர், அவருக்கு அறிவுரை கூறி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
English Summary
LEO Krishnagiri Vijay Fan Admit hospital