கொடூரம்! தோட்டத்தில் புகுந்த லியோ! 10 ஆடுகளை கடித்து கொன்ற சிறுத்தை புலி! - Seithipunal
Seithipunal


நெல்லை மாவட்டம் பனங்குடி தோட்டத்தில் சிறுத்தை புலி புகுந்து பத்துக்கும் மேற்பட்ட ஆடுகளை கடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நெல்லை மாவட்டம் பனங்குடி அடுத்த ரோஸ்மியாபுரத்தை சேர்ந்தவர் அரிராம். இவர்கள் சொந்தமான தோட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. அவர் தற்போது அந்த இடத்தில் விவசாயம் பார்த்து வருவதோடு இன்னும் 30க்கும் மேற்பட்ட வெள்ளை ஆடுகளை வளர்த்து வருகிறார்.

நேற்று வழக்கம்போல் ஆடுகளை ஆட்டுக்கொட்டாவில் அடைத்து பூட்டிவிட்டு  தோட்டத்தில் அருகில் உள்ள அவரது வீட்டில் தூங்க சென்றதாக கூறப்படுகிறது. வழக்கம்போல் அதிகாலையில் தோட்டத்து பக்கம் வந்த அரிராம் ஆடுகள் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

பின்னர் ஆடுகளை சிறுத்தை புள்ளி கடித்து கொதறிய இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிறுத்தை புலி கடித்ததில் பத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது 

மேலும் இரண்டு ஆடுகளை சிறுத்தை புலி தூக்கிச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த  தொடர்பாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது. சிறுத்தை புலி தோட்டத்தில் இறங்கி ஆடுகளை கடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

leopard has entered Panagudi plantation in Nellai district and bitten and killed more than ten goats


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->