பாபநாசத்தில் வலம் வரும் சிறுத்தை புலி - குழப்பத்தில் வனத்துறையினர்.! - Seithipunal
Seithipunal


மயிலாடுதுறை மாவட்டம் செம்மங்குளம் பகுதியில் தென்பட்ட சிறுத்தைப்புலி, அரியலூர் மாவட்டம் செந்துறையில் நடமாடியதாக வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே உடப்பாங்கரை கிராமத்தில் சிறுத்தைப்புலியை கண்டு அதிர்ச்சி அடைந்ததாக விவசாயி ஒருவர் தெரிவித்துள்ளார். 

அதாவது தனது நிலத்திற்கு நீர் பாய்ச்ச சென்ற போது சிறுத்தை புளியைக் கண்டு தென்னை மரத்தின் மீது ஏறி தான் தப்பித்ததாகவும், வயலில் இருந்து சிறுத்தைப்புலி சென்றபிறகு அதனை ஊர்மக்களிடம் தெரிவித்ததாகவும் விவசாயி ஐயப்பன் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து சம்பவ இடத்தில் வனத்துறையினர் ஆய்வு செய்ததைத் தொடர்ந்து புளியம்பாடி, கூனஞ்சேரி, உமையாள்புரம் உள்ளிட்ட கிராமங்களில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று தண்டோரா மூலமும், வாட்ஸ் ஆப் மூலமும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறையில் நடமாடிய சிறுத்தை அரியலூர் மாவட்டம் செந்துறைக்கு இடம்பெயர்ந்ததாக உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், பாபநாசம் பகுதியில் சிறுத்தைப்புலி நடமாட்டம் கண்டறியப்பட்டுள்ளது தஞ்சை மாவட்ட வனத்துறையினருக்கு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

leopard in near papanasam


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->