சேலத்தில் நடமாடும் சிறுத்தை தான் திருப்பத்தூரில் பிடிபட்டதா? வனத்துறை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..! - Seithipunal
Seithipunal


கடந்த 8 மாதங்களாக சேலம் பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக அவ்வப்போது பொது மக்கள் வனத்துறையிடம் கூறி வந்தனர். இதனால் வனத்துறை அதிகாரிகள் கேமரா பொருத்தி கண்காணித்து வந்தனர். ஆனால் சிறுத்தை வந்து போவதற்கான தடயம் எதுவும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் ராமசாமிமலை, குண்டக்கல் உள்ளிட்ட பகுதிகளில் மேய்ச்சலுக்கு செல்லும் ஆடு, மாடுகளையும், நாய்களையும் சிறுத்தை அடித்து சாப்பிட்டுள்ளது. பிறகு மீண்டும் காருவள்ளி ஊராட்சியைச் சேர்ந்த கோம்பை கரடு பகுதியில் மாட்டை அடித்து கொன்றுள்ளது.

இதையடுத்து மேட்டூர் நங்கவள்ளி ஒன்றியத்திலும் சிறுத்தை நடமாட்டத்திற்கான தடயங்கள் கிடைத்துள்ளன. இந்நிலையில் மேட்டூர் பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் கூண்டுகள் அமைத்தும் ஒரு வார காலமாக சிறுத்தை நடமாட்டம் தென்படவில்லை.

இந்நிலையில் காடையாம்பட்டி மற்றும் மேட்டூர் ஆகிய இரண்டு பகுதிகளில் சிறுத்தை நடமாட்டத்தை வனத்துறையினர் உறுதி செய்துள்ளனர். இதனிடையே நேற்று முன்தினம் திருப்பத்தூரில் ஒரு பள்ளிக்குள் புகுந்த சிறுத்தை ஒன்றை பல  மணிநேரம் போராடி வனத்துறையினர் பிடித்தனர். 

 

இதையடுத்து சேலத்தில் நடமாடிய சிறுத்தை தான் திருப்பத்தூரில் பிடிபட்டதா என்று அதன் காலடித் தடத்தை வனத்துறையினர் ஆராய்ந்த போது, இரு இடங்களிலும் உள்ள சிறுத்தைகள் வேறு வேறு என்று தெரிய வந்துள்ளது. 

மேலும் காடையாம்பட்டியில் ஒன்று, மேட்டூரில் ஒன்று என சேலம் பகுதிகளில் இரண்டு சிறுத்தைகள் நடமாடுவது உறுதியாகி உள்ளது. இதனால் சேலம் பகுதி மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Leopard Roaming in Salem Was the Same Got Caught in Tirupathur


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->