கலர்கலராக காட்சியளிக்கும் புதிய பாம்பன் பாலம்...!!
light setting in pamban new train bridge
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பாம்பனில் கடலின் நடுவே புதிய ரெயில் பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்தப் பாலத்தின் திறப்பு விழா நாளை மறுநாள் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. இந்த திறப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு புதிய ரெயில் பாலத்தை திறந்து வைக்கிறார்.
பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை முன்னிட்டு ராமேசுவரம், பாம்பன் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், பாஜக சார்பில் மோடியின் வருகைக்காக பேனர்கள், போஸ்டர்கள், கட்சிக்கொடி உள்ளிட்டவை வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பாம்பன் புதிய ரெயில்வே மேம்பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி 6-ம் தேதி திறக்க இருப்பதை ஒட்டி அங்குள்ள தூக்கு மேம்பாலம் வண்ண ஒளிகளில் ஜொலிப்பதை காணலாம். இதனை இரவில் கடலில் இருந்து பார்க்கும்போது புதிய பாம்பன் பாலம் வண்ணமயமாக பல்வேறு கலர்களில் ஜொலிப்பது அழகாக உள்ளது.
English Summary
light setting in pamban new train bridge