வீடுகளில், திருமண விழாக்களில் மதுவிருந்து வைக்க அனுமதி வழங்கிய அரசாணையை ரத்து செய்தது தமிழக அரசு! - Seithipunal
Seithipunal


வணிகப் பகுதிகள் இல்லாத இடங்களிலில் நடைபெறும் கொண்டாட்டங்கள், விழாக்கள், விருந்துகள் போன்றவற்றில் மதுபானம் பரிமாறுவதற்கான சிறப்பு உரிமம் வழங்குவதற்கான திருத்தப்பட்ட அரசாணையை தமிழ்நாடு அரசு ரத்து செய்துள்ளது.

தமிழ்நாட்டில் திருமண அரங்கங்கள், விளையாட்டு அரங்கங்கள், விருந்துக் கூடங்கள் மற்றும் வீடுகளில் மதுவை இருப்பு வைக்கவும், விருந்தினர்களுக்கு பரிமாறவும் தமிழ்நாடு அரசு அனுமதி அளித்திருக்கிறது. 

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுவதற்கு இரு நாட்கள் முன்னதாக வெளியிடப்பட்ட தமிழக அரசின் சிறப்பு அரசிதழ் அறிவிக்கையில், இது குறித்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன. 

திருமண அரங்கங்கள், விளையாட்டு அரங்கங்கள், விருந்துக் கூடங்கள் போன்ற வணிக பயன்பாட்டு இடங்களில் நடைபெறும் பொது நிகழ்ச்சிகள், கொண்டாட்டங்கள், விருந்து நிகழ்ச்சிகளில் சிறப்பு உரிமம் பெற்று, மதுவை இருப்பு வைக்கவும், பரிமாறவும் சிறப்பு உரிமம் வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வீடுகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் மது பரிமாறுவதற்கும் தமிழக அரசு அனுமதி அளித்திருக்கிறது.

மக்கள் நலனில் அக்கறை கொண்ட எந்த அரசும் இப்படி ஒரு முடிவை எடுக்கத் துணியாது. ஆனால், தமிழ்நாட்டில் மதுவைக் கையாளும் உரிமை சில  குழுக்களுக்கு வழங்கப்பட்டதன் விளைவு தான் இத்தகைய மிக மோசமான முடிவுகள் எடுக்கப்பட்டு உள்ளதாக பாமக உள்ளிட்ட அரசியல் காட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்தன.

மேலும், பாமக வழக்கறிஞர் பாலு, சென்னை உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்த நிலையில், திருமண மண்டபம், கொண்டாட்டங்கள், விழாக்கள், வீடுகளில் நடத்தப்படும் விருந்துகள் போன்றவற்றில் மதுபானம் பரிமாறுவதற்கான சிறப்பு உரிமம் வழங்குவதற்கான திருத்தப்பட்ட அரசாணையை தமிழ்நாடு அரசு ரத்து செய்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Liquor TN Govt Order cancel 2023


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->