உள்ளாட்சி தேர்தல் மறுவாக்கு எண்ணிக்கை ! 1 வாக்கு வித்தியாசத்தில் வென்றார் தற்போதைய தலைவர் ராஜேஸ்வரன்!!
Local government election recount! Incumbent Rajeswaran won by a margin of 1 vote
2019 உள்ளாட்சி தேர்தலில் திருச்செந்தூர் அருகே காயாமொழி ஊராட்சியில் பதிவான வாக்குகளை மறு எண்ணிக்கை செய்ததில் மீண்டும் 1 வாக்கு வித்தியாசத்தில் வென்றார் தற்போதைய தலைவர் ராஜேஸ்வரன் வெற்றி பெற்றுள்ளார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு தமிழ்நாடு முழுவதும் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் திருச்செந்தூர் அருகே உள்ள காயாமொழி என்னும் ஊராட்சியில் எட்டு பேர் காயாமொழி ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்டனர்.
உள்ளாட்சி தேர்தலில் முடிந்து வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியானது. அந்த நிலையில் காயாமொழி ஊராட்சியில் மொத்தம் 3088 வாக்குகள் பதிவாகின. இதில் ராஜேஸ்வரன் என்பவர் 1071 வாக்குகளும் முரளி மனோகரன் என்பவர் 1070 வாக்குகளும் பெற்றனர். ஒரு ஓட்டு வித்தியாசத்தில் ராஜேந்திரன் வெற்றி பெற்றார் என்று அறிவிக்கப்பட்டார்.
ஒரு ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த முரளி மனோகரன் என்பவர் மறுவாக்கு எண்ணிக்கை நடைபெற வேண்டும் என்று நீதிமன்றத்தை நாடினார். அந்த வழக்கு தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் இன்று மறு வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இந்த நிலையில் மீண்டும் வாக்கு எண்ணிக்கையில் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் ராஜேந்திரன் வெற்றி பெற்றுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
English Summary
Local government election recount! Incumbent Rajeswaran won by a margin of 1 vote