#தமிழகம் | தேர்தல் முன்னணி நிலவரம் - பகல் 1 மணி!  - Seithipunal
Seithipunal


மக்களவை பொதுத்தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை இன்று காலை முதல் நடந்து வருகிறது.

தற்போது வரை தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் வெளியான முன்னணி நிலவரப்படி, தமிழகத்தில் மொத்தம் உள்ள 39 தொகுதிகளில் திமுக 21 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி எட்டு தொகுதிகளிலும், விடுதலை சிறுத்தைகள் இரண்டு தொகுதிகளிலும், கம்யூனிஸ்ட் கட்சிகள் நான்கு தொகுதிகளிலும் முன்னிலை பெற்று வருகின்றன. 

தமிழகத்தை பொறுத்தவரை பாஜக கூட்டணியில் உள்ள பாமக ஒரு தொகுதியில் முன்னிலை பெற்று வருகிறது. தமிழகத்தில் பாஜக போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் பின்னடைவை சந்தித்துள்ளது. 

அதிமுக கூட்டணியில் தேமுதிக மட்டும் விருதுநகர் தொகுதியில் முன்நிலை பெற்றுவருகிறது. தமிழகத்தில் அதிமுக போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் பின்னடைவை சந்தித்துள்ளது. 

புதுவையில் காங்கிரஸ் கட்சி மின்நிலை பெற்றுள்ளது. பாஜக இரண்டாம் இடத்திலும், அதிமுக மூன்றாம் இடத்திற்கும் தள்ளப்பட்டுள்ளது. 


மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் பாஜக 241 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. மேலும் குஜராத்தின் சூரத் தொகுதியில் போட்டியின்றி பாஜக வேட்பாளர் ஏற்கனவே வெற்றி பெற்றிருந்தார். 

காங்கிரஸ் கட்சி 95 இடங்களில் முன்னிலை பெற்று வருகிறது. சமாஜ்வாதி 36 இடங்களிலும், திரிணாமுல் காங்கிரஸ் 31 இடங்களிலும், திமுக 21 இடங்களிலும் முன்னிலை பெற்று வருகின்றன. மொத்தமாக இண்டி கூட்டணி 236 இடங்களில் மின்நிலை பெற்றுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

LokSabha Election 2024 Tamilnadu DMK Lead


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->