அசத்திய நாம் தமிழர்! முக்கிய தொகுதியில் இரண்டாம் இடம்! - Seithipunal
Seithipunal


திருச்சி மக்கள் தொகுதியில் மதிமுக வேட்பாளர் முன்னிலை பெற்று வருகிறார். முதற்கட்ட நிலவரப்படி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இரண்டாவது இடம் பெற்றுள்ளார். 

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவாக கருதப்படும் இந்தியாவின் பாராளுமன்ற மக்களவை பொதுத்தேர்தலில் 543 தொகுதிகளில் 542 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. 

இந்த நிலையில், நாடு முழுவதும் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணிக்கு எண்ணும் பணி தொடங்கியுள்ளது. முதலக்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. அதனை தொடர்ந்து EVM எந்திரங்களில் பதிவான வாக்குகள் ஒவ்வொரு சுற்றுகளாக எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படும்.

இந்நிலையில், தற்போது வரை 542 தொகுதிகளில் 447 தொகுதிகள் முன்னிலை நிலவரம் வெளியாகி உள்ளது. அதன்படி பாஜக 262 இடங்களிலும், காங்கிரஸ் 169 இடங்களிலும், மற்ற கட்சிகள் 16 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன. 

தமிழகம் மற்றும் புதுச்சேரியை பொறுத்தவரை மொத்தம் உள்ள 39 தொகுதிகளில் திமுக 10 இடங்களிலும், அதிமுக, பாஜக தலா ஒரு இடத்திலும் முன்னிலை பெற்று வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

LokSabha Election 2024 TN Trichy Leading


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->