செங்கல்பட்டு மாவட்டம்.! கனரக லாரி உரசியதில் மினி பஸ் கவிழ்ந்து விபத்து.! - Seithipunal
Seithipunal


செங்கல்பட்டு மாவட்டத்தில் கனரக லாரி உரசியதில் மினி பஸ் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

சென்னை குரோம்பேட்டையில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூரில் இசை கச்சேரி செய்வதற்காக 20 பேர் கொண்ட குழுவினர் தனியார் மினி பஸ்சில் சென்று கொண்டிருந்தனர்.

அப்பொழுது செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடி அருகே கனரக லாரி ஒன்று மினி பஸ் மீது உரசி உள்ளது. இதனால் மினி பஸ் நிலைதடுமாறி, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவர் மீது கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக மினி பஸ்சில் சென்ற 20 பயணிகள் உயிர் தப்பியுள்ளனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், இந்த விபத்து குறித்து விசாரணையில் ஈடுபட்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Lorry minibus accident in Chengalpattu


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->