#BREAKING | சென்னையே முடங்கும் அபாயம்!! நவம்பர் 6 முதல் லாரிகள் ஸ்டிரைக்!!
Lorry strike in Chennai from November 6
சென்னை கொளத்தூர் ராஜமங்கலத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சென்னை மற்றும் புறநகர் லாரிகள் உரிமையாளர் சங்கம் சார்பில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வரும் நவம்பர் 6ஆம் தேதி முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் எல்லாம் விதமான லாரிகளும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் என 28 சங்கங்களைச் சேர்ந்த லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் அபராதம், 40 சதவீத வரி உயர்வு ரத்து செய்யக்கோரி இந்த வேலை நிறுத்த போராட்டம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த 28 லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் யுவராஜ் சாலைகளில் லாரிகள் நிறுத்தப்பட்டு இருக்கும்போது போக்குவரத்து போலீசார் தேவை இன்றி ஆன்லைன் மூலம் அபராதம் விதித்து மன உளைச்சலுக்கு ஆளாக்குவதாகவும், அதே போன்று 40% வரை உயர்த்தப்பட்ட சேவை வெறியை திரும்ப கோரியும் இந்த வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
தற்போது பண்டிகை காலம் என்பதால் லாரிகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர் நாங்களும் பொதுமக்களில் ஒருவர் தான் என்றும், எங்களுக்கும் இது போன்ற பலவித சோதனைகள் ஏற்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே திட்டமிட்டபடி வரும் நவம்பர் 6ஆம் தேதி முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் எல்லா விதமான லாரிகளும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் எனவும், எந்தவித சேவைகளிலும் லாரிகள் எடுபடாது என்றும் செய்தியாளர்கள் சந்திப்பில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். இந்த வேலை நிறுத்தத்தால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்பதால் அரசு உடனடியாக தலையிட்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
English Summary
Lorry strike in Chennai from November 6