வரலாற்றிலே முதல் முறையாக தாமரை பூ 50 ரூபாய்க்கு விற்பனை.!
lotus price increase in madurai flower market at history first
ஒவ்வொரு வருடமும் மாசி மாதம் மகாசிவராத்திரி கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் படி, இந்த வருடத்திற்கான மகாசிவராத்திரி விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.
இந்த விழாவை முன்னிட்டு சிவன் கோவில்களில் ஏராளமான பக்தர்கள் இரவு முழுவதும் கண்விழித்து இருந்து சாமி தரிசனம் செய்வார்கள். இந்த விழாவில் சுவாமிக்கு சிறப்பு பூஜையில் மலர் அபிஷேகம் செய்யப்படுவது வழக்கம்.
இந்த நிலையில், மதுரை மாட்டுத்தாவணியில் உள்ள மலர் சந்தையில் பூக்களை வாங்குவதற்கு ஏராளமானோர் குவிந்த வண்ணம் இருந்தனர். அதுமட்டுமல்லாமல், இன்று பூக்களின் வரத்தும் அதிகமாக இருந்தது.
அந்த வகையில் இன்று, மல்லிகை பூ 1500 முதல் 2000 ரூபாய் வரையும் பிச்சி பூ ரூ. 1,500, முல்லை ரூ. 1500, செவ்வந்தி ரூ. 200, சம்பங்கி ரூ. 300, செண்டுமல்லி ரூ. 150-ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
வழக்கமாக மலர் சந்தையில் தாமரை பூக்கள் 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை விற்கப்படுவது வழக்கம். ஆனால் இன்று வரலாற்றில் முதல் முறையாக ஒரு தாமரைப்பூ 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
இருப்பினும் பொதுமக்கள் இதனையும் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். தாமரைப்பூவின் இந்த திடீர் விலை உயர்வு வியாபாரிகளுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.
English Summary
lotus price increase in madurai flower market at history first