நாற்பதுக்கு நாற்பது மாயத்தால் நிகழ்ந்ததல்ல ; நியாயத்தால் நிகழ்ந்தது - வைரமுத்து!! - Seithipunal
Seithipunal


நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதியிலும் திமுக கூட்டணி வென்றுள்ள நிலையில், சினிமா பாடல் ஆசிரியர் வைரமுத்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் நாற்பதுக்கு நாற்பது என்பது மாயத்தால் நிகழ்ந்ததல்ல ; நிர்வாகத் திறம் என்ற நியாயத்தால் நிகழ்ந்தது என்று வைரமுத்துக்கே உரித்தான கவிதை நடையில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் 18-வது மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் என்று கடந்த மார்ச் 16ஆம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி இந்தியாவில் மக்களவை தேர்தல் கடந்த  ஏப்ரல் 19ஆம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கி ஜூன் ஒன்றாம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற்று நிறைவடைந்தது.

இந்தியாவில் 18-வது மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள்  அறிவிக்கப்பட்டது. இந்திய அளவில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 இடங்களில் வெற்றி பெற்று கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்கும் நிலையில் உள்ளது. அதேபோல் காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஆன இண்டியா கூட்டணி 230 இடங்களுக்கு மேல் வென்று ஆட்சி அமைக்க முடியாத கடினமான நிலையில் இருந்து வருகிறது.

தமிழ்நாட்டைப் பொருத்தவரை மக்களவைத் தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுவையில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதியிலும் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. இந்தநிலையில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்கள் உள்ளிட்ட வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், சினிமா பாடலாசிரியர் வைரமுத்து தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில் திமுக கூட்டணிக்கும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் வாழ்த்து தெரிவிக்கும் வகையில் கவிதை நடையில் வாழ்த்து  தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Lyricist Vairamuthu congratulates DMK and Stalin


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->