தமிழகம் முழுவதும் M.Phil மாணவர் சேர்க்கை ரத்து.! - Seithipunal
Seithipunal


சென்னை பல்கலைக்கழகம் 2024-2025 கல்வியாண்டு முதல் பல்கலைக்கழகத் துறைகள், இணைப்புக் கல்லூரிகள் மற்றும் அதன் ஆராய்ச்சி நிறுவனங்களில் M.Phil பட்டப்படிப்பை நிறுத்துவதற்கான முடிவை அறிவித்துள்ளது. பல்கலைக்கழக மானியக் குழு வெளியிட்ட அறிவிப்பைத் தொடர்ந்து சமீபத்தில் நடந்த பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டத்தில் இந்த அறிவிப்புத் தொடர்பாக முடிவு எடுக்கப்பட்டது.

இது குறித்து பல்கலைக் கழகப் பதிவாளர் அனைத்துக் கல்லூரி முதல்வர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;- சிண்டிகேட் முடிவின்படி, 2024-2025ஆம் கல்வியாண்டு முதல் பல்கலைக்கழகத் துறைகள், இணைப்புக் கல்லூரிகள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் வழங்கப்படும் M.Phil பட்டப்படிப்பு நிறுத்தப்படும். 

ஆகவே, 2024-2025 கல்வியாண்டு முதல், பல்கலைக்கழகத் துறைகள், இணைப்புக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை கண்டிப்பாக அனுமதிக்க கூடாது. முந்தைய கல்வி ஆண்டுகளில் அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் M.Phil பட்டப்படிப்புகளை வழங்குவதற்காக சென்னைப் பல்கலைக்கழகம் நிர்ணயித்த குறிப்பிட்ட காலத்திற்குள் தங்கள் படிப்பை முடிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

M Phil studies cancell in tamilnadu colleges


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->