ஆண்கள் தான் டார்கெட்! அரிப்பு, காய்ச்சல் - குரங்கம்மை குறித்து மத்திய சுகாதாரத்துறை சொன்ன செய்தி!
M Pox Safety And M Pox Symptoms
குரங்கம்மை தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை கடிதம் அனுப்பியுள்ளது. அதில்,
* 18 வயது முதல் 44 வயதுக்குட்பட்ட ஆண்களையே பெரும்பாலும் குரங்கம்மை தாக்குகிறது.
* ஒருவருடன் ஒருவர் உடல் தொடர்பு ஏற்படுவதால் குரங்கம்மை பரவுவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது
* தோலில் அரிப்பு ஏற்பட்டு, அதன் தொடர்ச்சியாக காய்ச்சல் ஏற்படுவதே குரங்கம்மையின் அறிகுறி
* எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவர்களை குரங்கம்மை எளிதாக தாக்குகிறது
* இந்தியாவில் புதிதாக யாருக்கும் குரங்கம்மை தொற்று ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்படவில்லை
* ஒருங்கிணைந்த நோய் தடுப்பு திட்டம் மூலம் குரங்கம்மை நோய் பாதிப்பு குறித்து தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
* சந்தேகத்தின் பேரில் குரங்கம்மை பரிசோதனைக்கு ஆய்வகங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, தமிழ்நாட்டில் குரங்கம்மை பாதிப்பு இருக்கிறதா? என்பது குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்திருந்தார்.
அதில், தமிழ்நாட்டில் குரங்கம்மை பாதிப்பு யாருக்கும் கண்டறியப்படவில்லை. குரங்கம்மை அறிகுறியுடன் இந்தியா வந்தவரை தனிமைப்படுத்தி சிகிச்சை தருவதாக ஒன்றிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
எந்த நாட்டில் இருந்து வந்தார்? தற்போது எங்கே இருக்கிறார்? என்ற தகவல்களை ஒன்றிய அரசு ரகசியமாக வைத்துள்ளது. விமான நிலையங்களில் விழிப்புணர்வு பதாகைகள் மற்றும் டிஜிட்டல் போர்டுகள் வைக்கப்பட்டு உள்ளன அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்திருந்தார்.
English Summary
M Pox Safety And M Pox Symptoms