மீனாவின் கணவர் கொரோனாவால் உயிரிழக்கவில்லையா? அமைச்சர் மா.சுப்ரமணியன் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்.! - Seithipunal
Seithipunal


சென்னை மயிலாப்பூரில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் பேசிய பொழுது அவரிடம் மீனாவின் கணவர் கொரோனாவால் உயிரிழந்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் மீனாவின் கணவர் கொரோனாவால் உயிரிழக்கவில்லை. 

அவருக்கு கடந்த பிப்ரவரி மாதத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அவருக்கு குணமான நிலையில், நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு இருந்தது. வீட்டிலேயே ஆக்சிஜன் உதவியுடன் அவர் சிகிச்சை பெற்று வந்தார். டிசம்பர் மாதம் மருத்துவமனையில் சேர்ந்து ஆறு மாதங்கள் மருத்துவமனையில் இருந்தார்.

அப்போது அவரது இருதயம், நுரையீரல் உள்ளிட்டவை பாதித்திருந்தது. இதனால், 95 நாட்கள் சுயநினைவின்றி சிகிச்சையில் இருந்தார்  கடந்த 15 நாட்களுக்கு முன்பு அவர் சிகிச்சை பெற்ற மருத்துவமனைக்கு சென்று பார்த்தேன். அவரது நிலைமை மிக மோசமாக இருந்தது.

உடல் உறுப்பு மாற்று சிகிச்சைக்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது  ஆனால், அவரது உடல் உறுப்புகள் பொருந்தவில்லை. முதல்வர் உட்பட நாங்கள் அவரை காப்பாற்ற நிறைய முயற்சி செய்தோம். ஆனால் முடியவில்லை . அவர்கள் உயிரிழக்கவில்லை. கொரோனாவுக்குப் பின் ஏற்பட்ட பாதிப்புகளினால் உயிர் இழந்தார்." என்று கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ma su about Meena Husband death


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->