மாசித்திருவிழாநாளைகொடியேற்றத்துடன்தொடக்கம்..திருச்செந்தூரில் குவியும் பக்தர்கள்!
Maasiru festival begins with flag hoisting. Devotees throng Tiruchendur!
பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித் திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித் திருவிழா நாளை திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கி 12 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.
கொடியேற்றத்தை முன்னிட்டு நாளை அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெறவுள்ளது. பின்னர் அதிகாலை 5 மணிக்கு மேல் 5.30 மணிக்குள் கோவில் செப்பு கொடிமரத்தில் மாசித்திருவிழா கொடியேற்றம் நடக்கிறது.
அதனை தொடர்ந்து பின்னர் கொடிமரத்திற்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம், அலங்காரமாகி மகா தீபாராதனை நடக்கிறது. மேலும் தொடர்ந்து மற்றகால பூஜைகள் நடைபெறும். அதன் பின்னர் விழாவின் சிகர நிகழ்ச்சியான 10-ம் திருநாள் தேரோட்டம் 12-ந் தேதி நடக்கிறது. முன்னதாக அன்று காலை 7 மணிக்கு விநாயகர், சுவாமி, அம்பாள் தனித்தனி தேர்களில் எழுந்தருளி வெளிவீதி நான்கிலும் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கின்றனர்.

அதனை தொடர்ந்து 11-ம் திருநாளான 13-ந் தேதி தெப்பத்திருவிழா நடக்கிறது. மேலும் அன்று இரவு 10.30 மணிக்கு மேல் சுவாமியும் அம்மாளும் 11 முறை தெப்பத்தில் சுற்றும் தெப்ப உற்சவம் நடக்கிறது. மேலும் மாசி திருவிழாவை முன்னிட்டு நாள்தோறும் சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வருவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Maasiru festival begins with flag hoisting. Devotees throng Tiruchendur!