மயிலாடுதுறை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் திருப்பம்: உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு! - Seithipunal
Seithipunal


போக்சோ வழக்கில் கீழமை நீதிமன்றம் விடுதலை செய்த இளைஞருக்கு, 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை வழங்கி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2015ம் ஆண்டு மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், கைதான ராஜேஷ் என்பவரை குற்றவாளி அல்ல எனக் கூறி, 2017ம் ஆண்டு நாகை போக்சோ விசாரணை நீதிமன்றம் விடுவித்தது.

இந்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்றத்தில் போலீசார் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், இந்த இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, நாகை போக்சோ நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், ராஜேஷை குற்றவாளி என அறிவித்த நீதிபதிகள் 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளனர்.

மேலும், ரூ.4000 அபராதமும் விதிக்கப்பட்ட நிலையில், குத்தாலம் போலீசார் ராஜேஷை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madras HC kuthalam Pocso Case judgement


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->