முரசொலி பஞ்சமி நில வழக்கில் மத்திய அரசு கொடுத்த உத்தரவாதம்!  - Seithipunal
Seithipunal


முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளதாக பாஜக அளித்த புகாரில் மேல் நடவடிக்கை எடுக்கக் கூடாது என தேசிய SC/ST ஆணையத்தை அறிவுறுத்துவதாக மத்திய அரசு உயர் நீதிமன்றத்தில் உத்தரவாதம் தெரிவித்துள்ளது.

புதிய நோட்டீஸ் அனுப்பி ஆணையம் இது குறித்து விசாரிக்கலாம் என தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக முரசொலி அறக்கட்டளை தரப்பில் மேல்முறையீடு வழக்கில், மத்திய அரசு இந்த உத்தரவாதத்தை கொடுத்துள்ளது.

மேலும் இந்த வழக்கின் விசாரணை வரும் 25ம் தேதிக்கு ஒத்திவைத்தும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முரசொலி அலுவலகம் பஞ்சமி நில வழக்கின் பின்னணி!

கடந்த 2019 ஆம் ஆண்டு பாஜக நிர்வாகி சீனிவாசன் என்பவர் தேசிய பட்டியலினத்தோர் ஆணையத்தில் முரசொலி கட்டிடம் பஞ்சமி நிலத்தில் இருப்பதாகவும், அதனை மீட்க வேண்டும் எனவும் புகார் அளித்திருந்ததன் அடிப்படையில் அப்போது தேசிய பட்டியலினத்தோர் ஆணையத்தின் துணைத் தலைவராக இருந்த எல்.முருகன் முரசொலி அறக்கட்டளைக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.

இந்த நோட்டீசை ரத்து செய்ய வேண்டும் எனவும், விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் முரசொலி அறக்கட்டளை காவலர் ஆர்.எஸ் பாரதி சார்பில் வழக்கு தொடரப்பட்டது. 

இந்த வழக்கின் தீர்ப்பில் தேசிய பட்டியலினத்தோர் ஆணையம் புதிதாக நோட்டீஸ் அனுப்பி விசாரணை தொடரலாம் எனவும், சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பு விளக்கங்களை பெற்று உரிய முடிவை எடுக்க வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து முரசொலி அறக்கட்டளை தரப்பில் மேல்முறையீடு வழக்கில், இன்று மத்திய அரசு பாஜக அளித்த புகாரில் மேல் நடவடிக்கை எடுக்கக் கூடாது என தேசிய SC/ST ஆணையத்தை அறிவுறுத்துவதாக உத்தரவாதம் கொடுத்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madras HC Murasoli case Central Govt


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->