மோசடி வழக்கில் நடிகர் ஆர்.கே.சுரேஷ்: அனுமதி இல்லாமல் இதனை செய்யக்கூடாது! நீதிமன்றம் உத்தரவு! - Seithipunal
Seithipunal



ஆருத்ரா நிதி நிறுவனம் மற்றும் அதன் இயக்குனர்கள் மீது, வாடிக்கையாளர்களுக்கு அதிக வட்டி தருவதாக தெரிவித்து ஏராளமானோரிடம் இருந்து ரூ. 2438 கோடி வசூலித்து மோசடி செய்ததாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். 

இந்த மோசடி வழக்கில் நடிகரும் தயாரிப்பாளரும் ஆன ஆர்.கே. சுரேஷுக்கு தொடர்பு இருப்பதாக போலீசாருக்கு தெரியவந்தது. இதனை அடுத்து ஆர்கே சுரேஷுக்கு விசாரணையில் ஆஜராக  சம்மன் அனுப்பப்பட்டது. 

ஆனால் அவர் விசாரணைக்கு ஆஜராகாமல் துபாய்க்கு சென்று விட்டதால் அவரை தேடப்படும் நபராக அறிவித்து 'லுக் அவுட்' நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. 

இதனை எதிர்த்து ஆர்.கே. சுரேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நேற்று நீதிபதிவிசாரித்தார். அப்போது ஆர்.கே. சுரேஷ் தரப்பில் ஒரு மனு தாக்கல் செய்ததில் வருகின்ற 10 ஆம் தேதி அவர் நாடு திரும்புவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. 

போலீஸ் தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர், இந்த மோசடி வழக்கில் இருந்து குற்றவாளியை காப்பாற்றுவதற்காகவும் இதற்கான சில முக்கிய நபர்களுக்கு பணம் கொடுக்க வேண்டும் என ஆர்.கே. சுரேஷ் இரண்டரை கோடி பெற்றுள்ளார். 

இது போலீசாருக்கு தெரிய வந்ததுடன் வெளிநாடு தப்பித்து விட்டார் என தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, மனுதாரர் வருகின்ற 12ஆம் தேதி காவல் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும். 

மனுதாரர் கைது செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டால் இந்த உயர் நீதிமன்றத்தின் முன் அனுமதியை போலீசார் பெற வேண்டும். இந்த வழக்கு விசாரணையை வருகின்ற 18ஆம் தேதிக்கு தள்ளி வைக்கிறேன் என நீதிபதி உத்தரவிட்டார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

madras high court order actor rk Suresh not arrested


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->