ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு! - Seithipunal
Seithipunal


51 இடங்களில் நடக்க போகும் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு!

கடந்த மாதம் இந்தியாவின் 75 ஆவது சுதந்திர ஆண்டு, அம்பேத்கரின் பிறந்தநாள் நூற்றாண்டு விழா, விஜயதசமி விழா மற்றும் ஆர்எஸ்எஸ் இயக்க துவக்க நாள் விழா முன்னிட்டு தமிழகத்தில் 51 இடங்களில் ஆர் எஸ் எஸ் அணிவகுப்பு நடத்த அனுமதி கேட்டு தமிழக உள்துறை மற்றும் டிஜிபியிடம் மனு அளிக்கப்பட்டிருந்தது.

அந்த மனுவின் மீது முடிவு எடுக்கப்படாததால் சென்னை உயர்நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் அனுமதி கேட்டு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்குகள் உயர்நீதிமன்ற நீதிபதி ஜிகே.இளந்திரையன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் காவல்துறை சார்பில் குற்றவியல் தலைமை வழக்கறிஞர் முகமது ஜின்னா ஆஜரானார். காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் "எந்த பாதையில் இவர்கள் அணிவகுப்பு செல்கிறார்கள் என்ற எந்த விவரமும் இல்லை. ஊர்வலம் செல்லும் பொழுது கோஷங்கள் எழுப்பக் கூடாது காயங்கள் ஏற்படுத்தும் பொருள் எடுத்து செல்லக்கூடாது சட்ட ஒழுங்கு மற்றும் மத நல்லிணக்கம் காக்கப்பட வேண்டும வலியுறுத்தப்பட்டது". இது தொடர்பாக எந்த ஒரு உறுதிமொழியும் மனுதாரர்கள் சார்பாக வழங்கப்படவில்லை என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது

ஊர்வலம் செல்லும் பாதையில் மதம் சார்ந்த பதட்டமான பகுதிகள் இருக்கலாம் என்பதால் துல்லியமாக அவர்கள் செல்லும் பாதையை தெரிவிக்க வேண்டும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. 

மேலும் இந்த விதிகளை எல்லாம் பின்பற்றுவதாக மனுதாரர்கள் உறுதி அளித்தால் அனுமதி கேட்டு அளிக்கப்பட்ட மனுவின் மீது பரிசீலனை மேற்கொள்ளப்படும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கு பதில் அளித்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் "பொதுக்கூட்டங்கள், அணி வகுப்புகள் நடத்துவதற்கு ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உள்ளது. இதை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது. இதுபோன்று நடக்கும் ஊர்வலங்களை காவல்துறையினர் ஒழுங்குபடுத்த முடியுமே தவிர அதற்கு அனுமதி மறுக்க முடியாது. கடந்த காலங்களில் ஆர்எஸ்எஸ் சார்பாக ஊர்வலங்கள் நடத்தப்பட்டுள்ளது. எந்தவித பிரச்சனையும் இதுவரை ஏற்படவில்லை. புதுச்சேரி அரசால் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் தமிழக அரசு அனுமதி மறுக்கிறது. 

பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் இருப்பதற்காகவே ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளில் அணிவகுப்பு நடத்தப்பட உள்ளதாகவும் நீதிமன்றம் வகுக்கும் எந்த ஒரு நிபந்தனையும் ஏற்றுக் கொள்வதாக மனுதாரர்கள் சார்பில் உத்திரவாதம் அளிக்கப்பட்டது. 

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இளந்திரையன் அக்டோபர் 2ம் தேதி நடைபெறவுள்ள ஆர்எஸ்எஸ் அணிவகுப்பிற்கு செப்டம்பர் 28ஆம் தேதிக்குள் அனுமதி வழங்க வேண்டும். மேலும் அணிவகுப்பு நடத்துவதற்கான நிபதனைகளை பின்னர் அறிவிக்கப்படும் என நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madras High Court orders permission to hold RSS parade


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->