கடவுள் பக்தி என்பது இடையூறு ஏற்படுத்த அல்ல.. சுட்டிக்காட்டிய சென்னை உயர்நீதிமன்றம்.!!
madrashc comments Devotion to God is not to disturb
தமிழ்நாட்டில் ராமர் கோவில் கும்பாபிஷேக நேரலை ஒளிபரப்பவும், அன்னதானம் நடத்தவும் தமிழக அரசு வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அவசர வழக்காக தொடரப்பட்ட இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற சிறப்பு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தலைமையிலான அமர்வை முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த அவசர வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை ஒளிபரப்பவும், அன்னதானம் வழங்கவும் தடை இல்லை என அதிரடியாக உத்தரவிட்டார்.
மேலும் அவர் தனது தீர்ப்பில் கடவுள் பக்தி என்பது இடையூறு ஏற்படுத்துவதற்காக அல்ல, கடவுள் பக்தி என்பது சமூகத்தின் அமைதி மற்றும் வளர்ச்சிக்கானது. பஜனைகள் செய்வதும், அன்னதானம் வழங்குவதும் தடை செய்யப்பட்டதல்ல. தவறான தகவலை பரப்ப கூடாது என்பதை அனைத்து தரப்பும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கு இடம் கொடுக்காமல் பொறுப்புடன் செயல்பட வேண்டும் அயோத்தி ராமர் கோவில் விழா நேரலை வழக்கில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இரு தரப்புக்கும் அறிவுரை ராமர் கோவில் விழா நேரலைக்கு விக்கப்பட்ட தடையை எதிர்த்து தொடர்ந்த வழக்கை முடித்து வைத்து உததரவிட்டுள்ளார்.
English Summary
madrashc comments Devotion to God is not to disturb