சவுக்கு சங்கர் தாயாரின் மனு மீது நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!!
Madrashc order to take action on SavukkuShankar mother petition
காவல்துறையினரை இழிவுபடுத்தும் வகையில் பேசிய சவுக்கு சங்கரை கோவை சைபர் கிரைம் போலீசார் கைது செய்த போது அவர் கஞ்சா வைத்திருந்ததாக சவுக்கு சங்கர் உட்பட 3 பேர் மீது தேனி மாவட்ட போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மேலும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சவுக்கு சங்கரை சிறை துணையின தாக்குவதாக அவரது வழக்கறிஞர் பரபரப்பு புகார் தெரிவித்து நீதிபதியிடம் முறையிட்டிருந்தார்.
இதற்கிடையே சவுக்கு சங்கர் தாயாரின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. நேற்று இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் சவுக்கு சங்கரின் உடல்நிலை குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கோவை சட்ட சேவைகள் ஆணையத்திற்கு உத்தரவிட்டிருந்தது.
அதன் அடிப்படையில் கோவை சட்ட சேவைகள் மையம் ஆய்வு மேற்கொண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது.
இந்த நிலையில் இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது சிறையில் சவுக்கு சங்கரை விசாரித்த மாவட்ட சட்ட சேவைகள் ஆணையக் குழு காயங்கள் ஏற்பட்ட விவரத்தை அறிக்கையாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. மேலும் சவுக்கு சங்கரை வேறு சிலைக்கு மாற்றக் கோரி அவரது தாயளித்த மனுவை இரண்டு வாரங்களில் பரிசீக்க வேண்டும் என என சிறை துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
English Summary
Madrashc order to take action on SavukkuShankar mother petition