மதுரை AIIMS மருத்துவமனை கட்டுமான பணி: சுற்றுச்சூழல் அனுமதி வழங்கிய தமிழக அரசு.! - Seithipunal
Seithipunal


மதுரை, திருமங்கலம் அருகே தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்காக கடந்த 2019 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். 

அதன் பிறகு நீண்ட காலமாக எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் துவங்காமல் இருந்தது. 2023 ஆம் ஆண்டு எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளுக்கான டெண்டர் அறிவிக்கப்பட்டது. 

இதில் கட்டுமான பணிகளை மேற்கொள்ளும் டெண்டர் எல் டி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. இதனை அடுத்து மார்ச் 14ஆம் தேதி கட்டுமான பணிகள் துவங்கப்பட்டது. 

நீண்ட காலம் கழித்து கட்டுமான பணிகள் துவங்கிய நிலையில் இதற்காக சுற்றுச்சூழல் அனுமதி பெறவில்லை என தகவல் வெளியானது. 

பின்னர் கடந்த இரண்டாம் தேதி சுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஆய்வு அறிக்கையை தமிழக அரசின் சுற்றுச்சூழல் துறையிடம் நிர்வாகம் ஒப்படைத்தது. 

இந்த திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கலாம் என கடந்த 10 ஆம் தேதி சுற்றுச்சூழல் மதிப்பீட்டுக் குழு பரிந்துரைத்தது. இந்நிலையில் தமிழ்நாடு அரசு எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளை மேற்கொள்வதற்காக சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madurai aiims TN govt environment clearance


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->