அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் இளைஞர் உயிரிழப்பு! சீனாவில் வேலை, விடுமுறைக்கு வந்தபோது... சோக பின்னணி!
Madurai Alanganallur Jallikattu Youngster death
மதுரை அருகே அலங்காநல்லூர் கீழக்கரை ஜல்லிக்கட்டில் ஏற்பட்ட விபத்தில் சோழவந்தான் பகுதியைச் சேர்ந்த மகேஸ் பாண்டியன் (22) உயிரிழந்தார்.
எம்.காம் பட்டதாரியான மகேஸ் பாண்டியன், சீனாவில் வேலை செய்து வந்தவர். பொங்கல் விடுமுறைக்காக ஊருக்கு திரும்பிய அவர், இன்று அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் உற்சாகத்துடன் பங்கேற்றார். போட்டியின் போது, சீறிய மாடொன்று அவரை மோதி உதறியதில், அவர் பலத்த காயமடைந்தார்.
உடனே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட மகேஸ் பாண்டியன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் உறுதி செய்தனர்.
அவரது மரணம் உறவினர்கள் மற்றும் கிராம மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
அதே சமயத்தில் இந்த சம்பவம், ஜல்லிக்கட்டு போட்டிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்த வேண்டியதற்கான தேவை குறித்து மீண்டும் விவாதத்தை தூண்டியுள்ளது.
English Summary
Madurai Alanganallur Jallikattu Youngster death