பாறாங்கல், கத்தி : கொலை செய்ய துணிந்த தமிழக போலீசார் இருவர் கைது.! அரண்டுபோன வங்கி ஊழியர்.! - Seithipunal
Seithipunal


காரில் வந்த வங்கி ஊழியரை வழிமறித்து, கொலை செய்ய முயற்சித்த காவல்துறையை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மதுரைக்கு அருகே தனியார் வங்கி ஊழியரை கொலை செய்ய முயன்ற, போலீசார் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மதுரை மாவட்டம், அரிட்டாபட்டியை சேர்ந்த ஜெகதீசன், தினேஷ் ஆகிய சகோதரர்கள் தமிழக காவல்துறையில் காவலர்களாக பணியாற்றி வருகின்றனர்.

இவர்களில் ஜெகதீசன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர். தினேஷ் தற்போது காவல்துறையில் பணியாற்றி வருகிறார். 

இவர்களுக்கும் வங்கி ஊழியர் வடிவேல் என்பவருக்கும் இடையே நில பிரச்சனை இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் சம்பவம் நடந்த அன்று இரவு, காரில் வந்த வங்கி ஊழியரை வழிமறித்து, பெரும் பாறாங்கல்லால் தாக்குதல் நடத்தி, கொலை செய்ய iமுயற்சித்தனர்.

வங்கி ஊழியரின் காரில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமரா மூலம் பதிவான காட்சிகளின் அடிப்படையில், ஜெகதீசன், தினேஷ் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

madurai arittapatti 2 PC arrested


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->