நள்ளிரவில் பரபரப்பு.. மதுரையில் சிக்கிய நகை, பணம்.. பறக்கும் படை அதிரடி.!! - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டம் ஊத்தங்குடி பகுதியில் ஏடிஎம்மில் நிரப்புவதற்காக கொண்டு செல்லப்பட்ட  1.53 கோடி ரூபாய் பறிமுதல்.  செய்யப்பட்டுள்ளது. ஏடிஎம் மையத்தில் பணம் இருப்பதற்காக சென்ற வாகனத்தை தடுத்து நிறுத்திய தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் ஆய்வு செய்வதில் உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட 1.53 கோடி ரூபாயை பறிமுதல் செய்துள்ளனர். 

அதேபோன்று மதுரையில் உரிய ஆவணம் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட 4 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். 

நேற்று இரவு வண்டியூர் சுங்கச்சாவடி அருகே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த பறக்கும் படை அதிகாரிகள் அவழியாத உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட 4 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். 

தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஏடிஎம் மையத்திற்கு நிரப்ப கொண்டு செல்லப்பட்ட பணம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ஆர்டிஓ அலுவலகத்தில் விசாரணையானது நடைபெற்று வருகிறது. 

உரிய ஆவணங்கள் கொடுக்கும் பட்சத்தில் ஏடிஎம் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்ட பணம் திரும்ப ஒப்படைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மதுரையில் அடுத்தடுத்து பணம் மற்றும் நகை பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madurai election flying squad seized jewel money in midnight


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->