போக்குவரத்து ஊழியர்களின் போராட்டத்திற்கு எதிரான வழக்கு - நாளை விசாரணை.!
madurai high court postpond transport employees strike against case
தமிழகத்தில் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் இன்று நள்ளிரவு முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும், சில பணிமனையில் பேருந்துகள் வழக்கம் போல் இயங்கினாலும் பேருந்து பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது, இதனால், மாணவர்கள், பொதுமக்கள் அனைவரும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இதற்கிடையே இந்த போராட்டம் குறித்து திருச்செந்தூரை சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்று தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் தெரிவித்திருந்ததாவது, “தமிழக அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் காலவரையற்ற போராட்டம் இன்று முதல் தொடங்குவதாக அறிவித்துள்ளனர்.
இந்த போராட்டம் சட்ட விரோதமானது. இதனால் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் நோயாளிகள் என பல தரப்பட்டவர்கள் கடுமையான பாதிப்புக்கு ஆளாவார்கள். அதுமட்டுமல்லாமல் இன்னும் சில நாட்களில் பொங்கல் பண்டிகை வருகிறது. எனவே போக்குவரத்துக்கழக தொழிலாளர்களின் போராட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.
இந்த மனுவை அவசர வழக்காக விசாரணை செய்ய வேண்டும் என்று நேற்று நீதிபதிகள் விஜயகுமார், கிருஷ்ணகுமார் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு மனுதாரர் முறையிட்டனர். அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி வழக்கு விசாரணையை இன்று ஒத்திவைத்திருந்தனர்.
அதன்படி, இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜெனரல் சண்முகசுந்தரம், இந்த வழக்கை நாளை ஒத்திவைக்குமாறு முறையிட்டார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் இந்த வழக்கை நாளைக்கு ஒத்திவைத்தனர்.
English Summary
madurai high court postpond transport employees strike against case