ஓட்டப்பிடாரம் || சட்டவிரோதமாக குவாரியில் மண் எடுப்பு.. அதிரடி உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்..! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒட்டப்பிடாரம் தாலுகாவில் கப்பிகுளம் பகுதியைச் சேர்ந்தவர் பாபு. இவர் மதுரை உயர்நீதிமன்றத்தில், மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அவர் தெரிவித்திருந்ததாவது,

"தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் மூலக்கரை ஊராட்சிக்கு உட்பட்ட புளியங்குளம் கால்வாயில், குவாரி அமைத்து, கிராவல் மண் எடுப்பதற்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அனுமதிக்கப்பட்டது. 

இந்த கிராவல் மண்ணை தொழில் வழிச் சாலை அமைப்பதற்கு கான்ட்ராக்டர்கள் எடுத்து செல்வதற்கு அனுமதிக்கப்பட்டது. ஆனால் சாலை அமைக்க அனுமதி பெற்றுவிட்டு, இரவும், பகலும் புளியங்குளம் கால்வாயில் இருந்து கிராவல் மண்ணை அள்ளிச்சென்றனர். 

கால்வாயில் இருந்து மண் எடுப்பதற்காக கால்வாயில் இருந்த நீரை வெளியேற்றினர். இதனால் இப்பகுதியில் விவசாயம் பாதிக்கப்பட்டது. இதற்காக அப்பகுதி மக்கள் குவாரியில் மண் எடுப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தினோம்.

தற்போது, சாலை அமைக்கும் பணிகள் முடிவடைந்த நினைவில், இதுவரையும் அந்த குவாரிகள் செயல்பட்டு வருகிறது. இதனால் இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது. இதுமட்டுமல்லாமல், மக்களின் குடி நீர் தேவை கேள்விக்குறியாகிய நிற்கிறது.

இதையடுத்து, புளியங்குளம் குளத்தில் குவாரி செயல்பாட்டை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு புகார் மனு அனுப்பினோம். ஆனால், இதுவரை அதிகாரிகளிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை.

இதுதொடர்பாக ஏற்கனவே தொடரப்பட்ட வழக்கை விசாரணை செய்த உயர்நீதிமன்றம், குவாரிக்கு இரண்டு மாதம் மட்டும் கால அவகாசம் அளிப்பதாக கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டது. அந்த அவகாசம் முடிந்தும் பலமாதங்களாக குவாரியில் சட்டவிரோதமாக மண் அள்ளப்பட்டு வருகிறது. இதற்கு தடை விதித்து உடனடியாக உத்தரவிட வேண்டும். என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயணபிரசாத் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், "கிராவல் மண் எடுக்க அனுமதித்த அவகாசம் முடிந்த பின்பும் சட்டவிரோதமாக எதன் அடிப்படையில் மண் அள்ளப்படுகிறது? இதை ஏற்க இயலாது. அந்த குவாரியில் கிராவல் மண் எடுக்க இடைக்கால தடை விதிக்கிறோம்" என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

madurai highcourt order for unofficial quarry run


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->