1000 பேருக்கு கறிவிருந்து.. ஆண்களுக்கு மட்டும் ஸ்பெஷல்.. திருவிழாவில் முண்டியடித்த கூட்டம்.!  - Seithipunal
Seithipunal


ஆண்கள் மட்டும் கலந்துகொள்ளும் கறிவிருந்து திருவிழா மதுரை திருமங்கலத்தில் கொண்டாடப்பட்டது. 

புதுக்கோட்டை, மதுரை என்றாலே சாப்பாட்டிற்கு பெயர் போன ஊர் என்று தான் அனைவருக்கும் தெரியும். அங்கு கல்யாணம், காதுகுத்து, கருமாதி என்று அனைத்திற்குமே கறி விருந்து தான். பொதுவாக வட தமிழகத்தில் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கறி விருந்து தவிர்க்கப்படுகின்றது. 

விசேஷங்கள் மட்டுமல்லாமல் கோவில் திருவிழாக்களிலும் கறி விருந்து வழங்கப்படும். அதிலும், ஆண்கள் தனியாகவும் பெண்கள் தனியாகவும் பங்கேற்கும் திருவிழாக்களும் அங்கே நடப்பது வழக்கம். அந்த வகையில், மதுரை திருமங்கலம் அருகே மேல உரப்பனூர் என்ற கிராமம் அமைந்துள்ளது. 

அந்த கிராமத்தில் காவல் தெய்வமாக எல்லையம்மன் கோவில் இருக்கின்றது. இந்த கோயிலில் ஆண்கள் மட்டும் கலந்து கொள்ளும் பாரம்பரியமான திருவிழா நடந்தது. இதில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதில் கலந்துகொண்ட அனைவருக்கும் கறி விருந்து வழங்கப்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madurai kari Virunthu Only For Mens


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->