மாணவிகளிடம் அதிமீறியதாக மதுரை மருத்துவக் கல்லூரி பேராசிரியர் இடைநீக்கம்.! - Seithipunal
Seithipunal


மாணவிகளிடம் அதிமீறியதாக மதுரை மருத்துவக் கல்லூரி பேராசிரியர் இடைநீக்கம்.!

மதுரை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மருத்துவக் கல்லூரியில் மயக்கயவியல் துறையில் செய்யது தாகிர் உசைன் என்பவர் துணைப் பேராசிரியராக பணி புரிந்து வருகிறார். இவர் பாலியல் தொல்லை தருவதாக ஆசிரியர் உட்பட மொத்தம் 23 மாணவிகள் கல்லூரி நிர்வாகத்தில் புகாரளித்தனர். 

அந்த புகாரில், பேராசிரியர் தங்களைத் பாலியல் உள்ளநோக்கத்தோடு தொடுவது, பாலியல் ரீதியாகப் அத்துமீறி பேசுவது, மோசமாக வர்ணிப்பது எனப் பாலியல் தொந்தரவு அளித்ததாகத் தெரிவித்திருந்தனர். 

இந்தப் புகார் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், துணைப் பேராசிரியர் செய்யது தாகிர் உசைன் மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது உறுதியானது. 

அதனால், தமிழ்நாடு மருத்துவக் கல்லூரி இயக்குநரகம் செய்யது உசேனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டது. உயிர்காக்கும் மருத்துவத்தை கற்றுத்தரும் ஆசிரியரே பெண்களிடம் அத்துமீறியதாக வெளியான தகவல் பொது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

madurai medical college professer suspend for sexuall harassment issue


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->