#மதுரை || 2021 -2022 ஆம் ஆண்டில் போக்சோ குற்றங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.!
madurai pocso report
மதுரை மாநகராட்சி பகுதியில் கடந்த 2021 -2022 ஆம் ஆண்டில் போக்சோ குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த இருபத்தி எட்டு மாதங்களில் மட்டும் மதுரையில் 552 போக்ஸோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக மதுரை மாநகராட்சி பகுதியில் மட்டும் கடந்த 28 மாதங்களில் 49 சிறுமிகள் மாயமாகி உள்ளதாகவும், திருமணம் முடிந்த நிலையில் அவர்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2021ஆம் ஆண்டு ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டபோது, மதுரை மாநகரில் மட்டும் 31 சிறுமிகள் திருமணம் முடிந்த நிலையில் காவல்துறையால் மீட்கப்பட்டு உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.