மதுரை போராட்டம் வாபஸ்!...ஏற்கனவே இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பரபரப்பு அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


மதுரை விமான நிலைய விரிவாக்க பணிக்காக, விமானம் நிலையம் அருகே உள்ள சின்ன உடைப்பு கிராமத்தில் உள்ள 136 வீடுகளை அகற்றுவதற்கான நடவடிக்கைக்காக இன்று காலையில் அதிகாரிகள் அங்கு குவிந்தனர். மேலும் ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நிலம் கையகப்படுத்த வந்த அதிகாரிகளை உள்ளே நுழைய மறுத்து, தங்களுக்கு மீள் குடியமர்வு, 3 சென்ட் நிலம் மாநகராட்சி இடத்திற்குள் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கிராமத்திற்குள் வர அதிகாரிகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ச்சியாக 4-வது நாளான இன்று அங்கு போராட்டம் நடைபெற்ற நிலையில், அப்பகுதி பொதுமக்கள் சாலையில் படுத்து போராடினர். மேலும், போராட்டம் நடைபெறும் இடத்திலேயே அங்கு உள்ள பொதுமக்கள் உணவு சமைத்து போராடினர்.  அப்போது பெண் ஒருவர் போராட்டத்தின் போது மயங்கி விழுந்த நிலையில், அவர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று நிலத்தை காலி செய்ய 6 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக மதுரை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும், சின்ன உடைப்பு கிராம மக்களுக்கு ஏற்கனவே இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டுள்ளதாகவும், கூடுதல் இழப்பீடு குறித்து எந்த மனுவும் கிராம மக்கள் வழங்கவில்லை என்று மதுரை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madurai protest called off district collector excited announcement that compensation has already been paid


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->