கரூர் மாவட்ட பஞ்சாயத்து தேர்தலில் திடீர் திருப்பம்..!! மதுரை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!
MaduraiHC order Karur district panchayat election results can be announced
கரூர் மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவருக்கான தேர்தல் முடிவினை அறிவித்துக் கொள்ளலாம் என உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த சில நாட்களாக கரூர் மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவர் தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர் கடத்தப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சை உண்டாக்கியது. இதன் காரணமாக தேர்தலை நடத்தக் கூடாது என அதிமுக தரப்பு உயர் நீதிமன்றத்தில் வலியுறுத்தியது.
அதிமுகவின் கோரிக்கையை நீதிமன்றம் ஏற்க மறுத்ததால் அறிவிக்கப்பட்ட தேதியில் தேர்தல் நடைபெற்றது. இந்த வாக்குப்பதிவானது உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி பதிவான வாக்குகளை சீலிட்ட கவரில் நீதிபதிகள் முன்பு சமர்ப்பிக்கப்பட்டது. அதேபோன்று வாக்குப்பதிவு முழுவதும் வீடியோ பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் தேர்தல் முடிவு நீதிமன்றம் வாயிலாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடைபெற்று முடிந்த பஞ்சாயத்து துணை தலைவர் தேர்தலில் 7 வாக்குகள் திமுகவிற்கும் 4 வாக்குகள் அதிமுகவிற்கும் பதிவாகியுள்ளது.
அதன் அடிப்படையில் கடத்தப்பட்ட வேட்பாளர் தனது வாக்கை செலுத்தி இருந்தாலும் அதிமுக வெற்றி பெற்றிருக்காது.
அதனை அரசு தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் கடத்தப்பட்ட வேட்பாளர் வாக்களித்து இருந்தாலும் அதிமுக வெற்றி பெற்றது என்பதால் தேர்தல் முடிவுகளை அறிவிக்க வேண்டும் என வாதிட்டார்.
இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் நடந்து முடிந்த கரூர் மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவருக்கான தேர்தல் முடிவுகளை அறிவித்துக் கொள்ளலாம் என உத்தரவிட்டுள்ளனர். அதேபோன்று அதிமுக வேட்பாளர் கடத்தப்பட்டது தொடர்பான வழக்கினை கரூர் மாவட்ட துணை கண்காணிப்பாளர் தலைமையிலான காவல்துறையினர் விசாரணை நடத்த வேண்டும் உத்தரவிட்ட நீதிபதிகள் இந்த வழக்கினை முடித்து வைத்துள்ளனர்.
English Summary
MaduraiHC order Karur district panchayat election results can be announced