சிக்கன் பிரியாணியில் கிடந்த புழு - அதிர்ந்துபோன வாடிக்கையாளர்.!
maggots on chicken biriyani customer complaint
சிக்கன் பிரியாணியில் கிடந்த புழு - அதிர்ந்துபோன வாடிக்கையாளர்.!
ராமநாதபுரம் மாவட்டம் புதிய பேருந்து நிலையத்தில் அமைத்துள்ள பிரபலமான பிரியாணி கடை ஒன்றில் பட்டினம்காத்தான் ஊரைச் சேர்ந்த கண்ணன் என்பவர் மூன்று பிரியாணி பார்சல் வாங்கிச் சென்றுள்ளார்.
அதன் படி வீட்டிற்கு சென்ற அவர், பார்சலை பிரித்து சாப்பிட முயன்ற போது பிரியாணியில் புழு கிடந்துள்ளது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், தனது செல்போனில் படம் எடுத்து அதனை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
![](https://img.seithipunal.com/media/vaan kozhi biriyani in-klvfz.gif)
அந்தப் பதிவில், ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள பிரியாணி கடையில் மூன்று பார்சல் வாங்கினேன். அந்த பிரியாணியில் இரண்டு புழுக்கள் இருந்தது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த சம்பவம் குறித்து உணவு பாதுகாப்பு அதிகாரிகளிகளிடம் புகார் அளித்தார்.
இதையடுத்து, அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பிரியாணி கடையில் சோதனை நடத்தி அங்கிருந்த பிரியாணி மற்றும் உணவுப்பொருள்களை ஆய்வு செய்தனர். இதைத்தொடர்ந்து, வாடிக்கையாளர் அளித்த புகாரின் பேரில் அந்த கடைக்கு நோட்டீஸ் வழங்கிச் சென்றனர். இந்தச் சம்பவம் ராமநாதபுரம் பகுதியில் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
maggots on chicken biriyani customer complaint