மகளிர் உரிமைத் தொகையில் பிடித்தமா? எச்சரிக்கும் அமைச்சர்!
Makalir Urimai Thokai Thittam Minister warn to banks
தமிழக அரசின் மகளிர் உரிமைத் தொகையில் பிடித்தம் செய்யக்கூடாது என்று, அனைத்து வங்கிகளுக்கும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவிக்கையில், "கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை நிர்வாக காரணங்களுக்காக வங்கிகள் பிடித்தம் செய்யக் கூடாது.
ஏற்கனவே அரசின் உதவித் தொகையை பிடித்தம் செய்யக்கூடாது என அரசுக்கும் வங்கிகளுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தை மீறும் வங்கிகளின் பரிவர்த்தனைகள் வேறு வங்கிகளுக்கு மாற்றி மேல் நடவடிக்கை எடுக்கப்படும்.
உரிமைத் தொகையில் வங்கிகள் பிடித்தம் செய்தால், 1100 என்ற முதல்வரின் உதவி மைய தொலைபேசி எண்ணை தொடர்புகொண்டு புகார் அளிக்கலாம்.
மேலும், மகளிர் உரிமைத்தொகையில் பிடித்தம் செய்திருந்தால், புகார்களின் அடிப்படியில் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அமைச்சர் எச்சரித்துள்ளார்.
கட்டணம் என்ற பெயரில் மகளிர் உரிமைத் தொகைத்திட்டத்தின் கீழ் வங்கிக்கணக்குகளுக்கு வரும் பணத்தை நிர்வாக காரணங்களுக்காக வங்கிகள் பிடித்தம் செய்ய கூடாது என்று, நேற்று தமிழக முதல்வருக்கு மார்க்சிஸ்ட் கம்னியூஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கடிதம் எழுதி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Makalir Urimai Thokai Thittam Minister warn to banks